UPDATED : ஜூலை 10, 2026 05:00 PM
ADDED : ஜூலை 10, 2026 05:02 PM
திருப்பூர்:
குரூப் - 2, 2ஏ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும் 20ம் தேதி முதல் துவங்குகிறது.
தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்-பதிவாளர் நிலை - 2 பணிகளுக்கான குரூப் - 2, முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் பணிகளுக்கான குரூப் - 2ஏ தேர்வுக்கான, முதல்நிலை தேர்வு, வரும் அக்., 25ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகத்தின், உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் செயல்படும் கூடுதல் பயிற்சி மையத்தில், குரூப் - 2, 2ஏ தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, வரும், 20ம் தேதி துவங்குகிறது.
இலவச பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ, 0421 2999152, 94990 55944 என்ற எண்ணில் அழைத்து பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
