UPDATED : செப் 02, 2026 05:37 PM
ADDED : செப் 02, 2026 05:38 PM
சென்னை:
'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் - 2, குரூப் - 2ஏ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்கும்' என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, குரூப் - 2ஏ, தேர்விற்கான பயிற்சி வகுப்பு, நாளை காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது.
பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. பயிற்சியில் சேர விரும்புவோர், https://forms.gle/z3LzaGSpNeA1djJ76 என்ற படிவத்தில், தங்கள் விவரங்களை பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரடியாக அணுகலாம். மேலும், decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
