sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்


UPDATED : ஆக 17, 2024 12:00 AM

ADDED : ஆக 17, 2024 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2024 12:00 AM ADDED : ஆக 17, 2024 11:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓமலுார்:
சேலம் பெரியார் பல்கலையில் குரூப்-2 போட்டி தேர்வுக்கு ஒரு மாதம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பெரியார் பல்கலை பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:


பெரியார் பல்கலையில், குடிமையியல் பணித்தேர்வு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும், மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது. பல்கலை பயிற்சி மையம், சேலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்துடன் இணைந்து வரும், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 போட்டி தேர்வுக்கான, ஒரு மாத இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது.

பல்கலை மாணவர்கள் மட்டுமின்றி, வெளியில் இருந்து போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் சேர்ந்து பயன்பெறலாம். மாணவர்களுக்கு தேர்வு குறிப்பு, மாதிரி வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்படும். இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். வரும் 19 மதியம், 3:00 மணிக்கு பெரியார் பல்கலை ஆட்சி பேரவை கூடத்தில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது. இதில் சேர்ந்து பயில, பல்கலை நுாலக இரண்டாவது தளத்தில் செயல்படும், குடிமையியல் தேர்வு பயிற்சி மையம் மற்றும் வழிகாட்டுதல் மையத்தில் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 9789319722 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us