தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமப்புற வங்கியில் காலிப்பணியிடம்; போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

கிராமப்புற வங்கியில் காலிப்பணியிடம்; போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

கிராமப்புற வங்கியில் காலிப்பணியிடம்; போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : நவ 07, 2026 01:36 AM

ADDED : நவ 07, 2026 01:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 01:36 AM ADDED : நவ 07, 2026 01:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய் ப்பு அலுவலகத்தில் வரும், 12ம் தேதி முதல், கிராமப்புற வங்கிகளில் காலிபணியிடத்திற்கான போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தால், கிராம வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, 13,745 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பானது, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும், 12ம் தேதி வியாழக்கிழமை காலை, 10:30 மணிக்கு துவங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சிறுதேர்வுகள் மற்றும் முழு மாதிரித்தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இந்த அலுவலகத்தில் நுாலக வசதி, பயிலக வசதி, இலவச இணைய வசதிகள் உள்ளிட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன.

எனவே, இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள், https://forms.gle/u3w617qWNq6aefoL6 என்கிற இணைப்பின் மூலம், தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த அலுவலகத்தை நேரிலோ அல்லது 04343-291983 தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us