தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எஸ்.சி., தேர்வுக்கு 8 முதல் இலவச பயிற்சி

எஸ்.எஸ்.சி., தேர்வுக்கு 8 முதல் இலவச பயிற்சி

எஸ்.எஸ்.சி., தேர்வுக்கு 8 முதல் இலவச பயிற்சி


UPDATED : அக் 06, 2026 01:14 PM

ADDED : அக் 06, 2026 01:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 01:14 PM ADDED : அக் 06, 2026 01:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மத்திய அரசின் பல துறைகளில் காலியாக உள்ள 2,536 பணியிடங்களை நிரப்புவதற்கான எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல்., தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகபட்ச வயது 27. ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க அக்.7 கடைசி நாள்.

இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், அக்.8 முதல் தொடங்கவுள்ளன. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

பங்கேற்க விரும்புவோர், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தை நேரில் அணுகலாம். 94990 55937 என்ற எண்ணில் பேசலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us