சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு உணவு, விடுதியுடன் இலவச பயிற்சி
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு உணவு, விடுதியுடன் இலவச பயிற்சி
UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM
ADDED : ஜூலை 01, 2024 08:11 AM
சென்னை:
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான பிரதான தேர்வுக்கு, பாரதி பயிலகம் சார்பில், உணவு, தங்கும் வசதியுடன் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய குடிமையியல் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில், முதல்நிலை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, பிரதான தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, சென்னை அண்ணா நகரில் உள்ள சேவா பாரதியின் பாரதி பயிலகம், இலவச பயிற்சி அளிக்கிறது.
பல்வேறு பாடங்கள், துறைகளில் சிறந்த நிபுணர்களைக் கொண்டு, மாணவர்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. தரமான நுாலகம் மற்றும் படிப்பக வசதி இங்கு உள்ளது.
இந்த பயிற்சிக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என, பாரதி பயிலகம் அறிவித்துஉள்ளது. தங்குமிடத்தில், மகளிருக்கு தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற விரும்புவோர், ஜூலை, 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த கூடுதல் விபரங்களுக்கு, பாரதி பயிலகம் இயக்குனர் உ.தன்ராஜ் மற்றும் அலுவலகத்தை, 90032 42208, 98844 72208 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.