UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 03:54 PM

சென்னை ஐ.ஐ.டி.,யின் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை, கணிதம் வாயிலாக 'அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங்' என்ற இலவச ஆன்லைன் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் ஆக்கப்பூர்வமான சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
படிப்பு நிலைகள்:
மொத்தம் நான்கு நிலைகள். முதல் நிலையில் சேர குறைந்தது 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும். இரண்டாவது நிலைக்கு குறைந்து 7ம் வகுப்பும், மூன்றாவது நிலைக்கு குறைந்து 9ம் வகுப்பும், நான்காவது நிலைக்கு குறைந்து 11ம் வகுப்பும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
படிப்பு காலம்:
ஒவ்வொரு நிலையும் 10 வாரங்கள் கொண்டவை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://iitmpravartak.org.in/out-of-box-thinking எனும் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.
வகுப்புகள் துவங்கும் நாள்:
ஆகஸ்ட் 10
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆகஸ்ட் 9
விபரங்களுக்கு:
https://iitmpravartak.org.in/