UPDATED : அக் 19, 2026 03:01 PM
ADDED : அக் 19, 2026 03:02 PM
மதுரை, எஸ்.எஸ்.காலனி அருணாச்சலம் தெருவில் மத்திய, மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பெட்கிராட் நிறுவனம் சார்பில் கிராமப்புற பெண்கள், ஆண்களுக்கு இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதில் நர்சிங் பயிற்சி, ஆடை வடிவமைப்பு, தையல் பயிற்சி, இளநிலை மென்பொருள் உருவாக்குநர் பயிற்சி ஆகிய மூன்று பிரிவுகளில் 4 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது.
நர்சிங், இளநிலை மென்பொருள் உருவாக்குநர் பயிற்சிக்கு பிளஸ் 2 தேர்ச்சி, ஆடை வடிவமைப்பு, தையல் பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். பயிற்சிக் காலத்தில் ஊக்கத்தொகை,. இலவசத் தங்குமிடம், உணவு மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழுடன் வேலைவாய்ப்பு வசதியும் செய்து தரப்படுகிறது. 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஆதார், குடும்ப அட்டை, ஜாதி, கல்விச் சான்றிதழ், வங்கி பாஸ்புத்தத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். விவரங்களுக்கு சேர 89030 03090ல் பேசலாம்.
