UPDATED : ஜன 10, 2026 09:15 AM
ADDED : ஜன 10, 2026 09:16 AM
ஊட்டி: ஊட்டி அரசு கலைக்கல்லூரில் நடந்த நிகழ்ச்சியில், மாணவ மாணவியருக்கு, 'லேப்டாப்' வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தலைமை அரசு கொறடா ராமச்சந்திரன் பேசியதாவது:
மாநில முதல்வர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது, 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தில், விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி அரசு கலை கல்லூரியை சேர்ந்த, 700 மாணவர்கள்; என்.பி.ஏ., பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த, 54 மாணவர்கள்; ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த, 107 மாணவர்கள்; ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்ந்த, 127 மாணவர்கள்; கூடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த, 155 மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்பட்டது.
இதனை பெற்ற மாணவ மாணவியர், நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களது கல்வித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், மகளிர் திட்ட இயக்குனர் ஜெயராமன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொ) பிராங்ளின் ஜோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

