UPDATED : அக் 20, 2026 01:06 PM
ADDED : அக் 20, 2026 01:07 PM
அ நிறம் | அளவு
திருப்பூரில் இலவச சமஸ்கிருதப் பயிற்சி வகுப்பில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருத பாரதி சார்பில், திருப்பூர் சிவாஜி மந்திரியில், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரண்டு மணி நேரம் இலவச சமஸ்கிருதப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இதில் 13 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். பயிற்சி நிறைவில் தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விஜயதசமியை முன்னிட்டு, இப்பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 93632 22184 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
