பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சி
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சி
UPDATED : டிச 13, 2025 09:29 AM
ADDED : டிச 13, 2025 09:30 AM
சென்னை:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ராஜீவ் காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையத்தில் கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 15, 2025 முதல் தொடங்க உள்ளன.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம், திறன் இந்தியா இயக்கம் மற்றும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0 ஆகியவற்றின் கீழ் சுமார் 400 மணி நேரம் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தொழில்நுட்பத்துடன் இணைந்த நடைமுறைப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
கண்ணாடி இழை வெட்டி ஒட்டுதல், அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம், கண்ணாடி இழை தொழில்நுட்பம், கம்பியில்லா/மொபைல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய நவீன தொலைத்தொடர்பு துறைகளில் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு வழங்கப்படும். மேலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கட்டணமில்லா கூடுதல் திறன் மேம்பாட்டு பயிற்சி டிசம்பர் 22 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.rgmttc.bsnl.co.in
என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு 9443100773 / 9487259085 என்னும் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

