தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/17 முதல் கோடைக்கால இலவச பயிற்சி முகாம்

17 முதல் கோடைக்கால இலவச பயிற்சி முகாம்

17 முதல் கோடைக்கால இலவச பயிற்சி முகாம்


UPDATED : ஏப் 16, 2026 07:13 PM

ADDED : ஏப் 16, 2026 07:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 16, 2026 07:13 PM ADDED : ஏப் 16, 2026 07:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
வரும் 17 முதல் கோடைக்கால இலவச பயிற்சி முகாம் நடக்கிறது என, கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:


கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இலவச கோடைக்கால பயிற்சி முகாம் வரும், 17 முதல், மே 1 வரை நடக்கிறது. இதில், தடகளம், கால்பந்து, கையுந்துபந்து, கபடி, கூடைப்பந்து, வளைகோல் பந்து, ஜூடோ மற்றும் டென்னிஸ் ஆகிய, 8 விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

முகாமில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர், 18 வயதிற்குள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்ப்பித்தல் வேண்டும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்ள சந்தா தொகை ஏதும் இல்லை. இலவசமாக பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை வரும், 11 முதல் அலுவலக வேலை நேரங்களில் காலை, 10:00 முதல் 05:30 மணி வரை நேரடியாகவோ அல்லது dsokarur@gmail.com (அல்லது) மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 74017 03493, தடகள பயிற்றுனர் 99442 00362 ஆகியோரை எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us