UPDATED : ஏப் 20, 2026 10:53 PM
ADDED : ஏப் 20, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
சென்னை:
வண்டலூர், கிரசன்ட் பல்கலையில், வரும் 24ம் தேதி முதல், இலவச கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் துவங்குகிறது.
வண்டலூரில் உள்ள கிரசன்ட் பல்கலை சார்பில், கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம், வரும் 24ம் தேதி துவங்குகிறது. இதில், தடகளம், கால்பந்து, வாலிபால், கபடி, குத்துச்சண்டை, கராத்தே, டேக்வாண்டோ, வாள் வீச்சு, செஸ், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
இதில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் சிறுவர், சிறுமியர் பங்கேற்கலாம். பயிற்சி முகாம், மே 7ம் தேதி வரை நடக்கிறது. தினமும், மாலை 04:00 முதல் 06:00 மணி வரை பயிற்சி நடக்கிறது.
பங்கேற்க விரும்புவோர், 97900 85085, 99521 845559 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
