UPDATED : ஏப் 20, 2026 07:30 PM
ADDED : ஏப் 20, 2026 07:32 PM
வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களுக்கும், சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. திருப்பூர், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மொபைல் போன் பழுது பார்த்தல் மற்றும் சரிசெய்தல் குறித்த ஒரு மாத காலச் சிறப்புப் பயிற்சியை வழங்க உள்ளது. பயிற்சி 21ல் துவங்குகிறது.
இதன் இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ள முக்கியத் தகவல்கள்:
இலவசப் பயிற்சி
இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
உணவு மற்றும் தங்குமிடம்: பயிற்சியின் போது மாணவர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு மற்றும் தேநீர் எவ்விதக் கட்டணமுமின்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு மத்திய அரசு மற்றும் கனரா வங்கியின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.
தொழில் கடன் ஆலோசனைகள்
பயிற்சி முடித்தவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினால், அதற்கான கடன் பெறுவது குறித்த ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் முதலிபாளையம் வஞ்சி நகரில் உள்ள கனரா வங்கி பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர்புக்கு:
94890 43923 மற்றும் 90804 42586.
