sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அடிப்படை முதல் 'அட்வான்ஸ்டு' திறன்கள் வரை!

/

அடிப்படை முதல் 'அட்வான்ஸ்டு' திறன்கள் வரை!

அடிப்படை முதல் 'அட்வான்ஸ்டு' திறன்கள் வரை!

அடிப்படை முதல் 'அட்வான்ஸ்டு' திறன்கள் வரை!


UPDATED : ஆக 08, 2024 12:00 AM

ADDED : ஆக 07, 2024 08:42 PM

Google News

UPDATED : ஆக 08, 2024 12:00 AM ADDED : ஆக 07, 2024 08:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறந்த கல்வி முறையோடு, அனைத்து மாணவர்களுக்கும் வாழ்க்கைக்கான முழுமையான கல்வியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கம்.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கிய காலக்கட்டத்தை எங்களுடன் செலவிடுகிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து, அவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் வளமான கல்லூரி வாழ்க்கையை வழங்குவதோடு, சுயமாக எவ்வாறு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்ள செய்கிறோம்.

56 ஆய்வகங்கள்

இன்றைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து திறன் வளர்ப்பு பயிற்சியையும் கல்லூரி வளாகத்திலேயே வழங்குகிறோம். குறிப்பாக, 'குருகுலம்' எனும் பெயரில் வெல்டிங், பி.எல்.சி., எலக்ட்ரிக்கல், புரோட்டோடைப் உட்பட பல்வேறு அடிப்படை திறன் பயிற்சியை அனைத்து துறை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கும் வழங்குகிறோம். மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சி, சி++, பைத்தான், புல்ஸ்டாக், ஏ.ஆர்., வி.ஆர்., ஏ.ஐ., உட்பட தொடர்ந்து பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகளை கற்கும் வாய்ப்பையும் வழங்குகிறோம்.

மாணவர்களுக்கும் சரி, ஆசிரியர்களுக்கும் சரி வழக்கமான வருகைப்பதிவு மற்றும் வகுப்பறை கல்வி எங்கள் கல்வி நிறுவனத்தில் இல்லை. ஒவ்வொரு பாடத்தையும் வீடியோ பதிவுகள் மற்றும் 'பிரசன்டேஷன்'கள் வாயிலாக மாணவர்கள் ஒவ்வொருவரும் சுயமாக கற்பதோடு, அவற்றை ஆய்வகங்களில் அனுபவ ரீதியிலாக செயல்முறையில் புரிந்து கற்கின்றனர். சமூகம் மற்றும் தொழில்துறை சந்திக்கும் சவால்களுக்கு உரிய தீர்வு காணும் வகையில் மாணவர்களிடம் புத்தாக்க சிந்தனையை மேம்படுத்துகிறோம். இத்தகைய செயல்பாடுகளுக்காக, தொழில் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் நவீன வசதிகளுடன் 56 ஆய்வகங்கள் செயல்படுகின்றன.

மாணவர்கள் சுயமாக கல்வி கற்பதற்கு ஏதுவாக 'விக்கிபீடியா' போன்றதொரு பிரத்யேக தளத்தை எங்கள் கல்லூரிலேயே தயாரித்துள்ளோம். மாணவர்களின் தேர்வு எழுதும் முறையிலும் மாற்றத்தை மேற்கொண்டு எந்தவித அழுத்தமுமின்றி ஆர்வத்துடன் கல்வி கற்கும் ஓர் ஏதுவான கல்வி சூழலை உருவாக்கியுள்ளோம்.

அட்வான்ஸ்டு திறன்கள்

கல்லூரி படிப்பை நிறைவு செய்வதற்குமுன் மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, சிறந்த நிறுவனத்தில் வேலை பெற்றவர்களாகவும், தொழில்முனைவோர்களாகவும், சிறந்த உயர்கல்வி மேற்கொள்பவராகவும் பரிணமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஒரு இன்ஜினியருக்கு தேவையான அடிப்படை திறன்கள் முதல் அட்வான்ஸ்டு திறன்கள் வரை அனைத்தையும் பெற்றவர்களாக, உலகில் வளம் வரும் வகையில் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குகிறோம். அனைத்து கல்வி நிறுவனங்களும் இத்தகைய முயற்சியை மேற்கொண்டு நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதே எனது ஆசை.


-எஸ்.வி. பாலசுப்ரமணியம், தலைவர், பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சத்தியமங்கலம், ஈரோடு.

mpv@bitsathy.ac.in
9940077773






      Dinamalar
      Follow us