UPDATED : ஏப் 01, 2025 12:00 AM
ADDED : ஏப் 01, 2025 08:02 AM
திருக்கோவிலுார்:
ஜி.அரியூர் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான திரைப்பட விழாவில், சிறந்த இயக்குனர் மற்றும் கதை எழுத்தாளருக்கான முதல் பரிசை வென்றனர்.
சென்னையில் மாநில அளவில் சிறார் திரைப்படத் திருவிழா தேர்வு நடந்தது.
இதில் திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் மாதிரி மேல்நிலை பள்ளியில் பயிலும், 7ம் வகுப்பு மாணவி யஷ்வதா மாநில அளவில் சிறந்த திரைப்பட இயக்குனர் பிரிவில் முதலிடம் பிடித்தார்.
அதேபோல, 9ம் வகுப்பு படிக்கும் செந்தில் முருகன் சிறந்த திரைப்பட கதை ஆசிரியர் பிரிவில் முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விருது வழங்கி, பாராட்டினார்.
இந்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் திவ்யா ஆகியோரை தலைமை ஆசிரியர் சுதா, உதவி தலைமை ஆசிரியர் ஜோசப் தியாகராஜன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

