சாதனை பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சாதனை பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
UPDATED : டிச 16, 2025 09:18 AM
ADDED : டிச 16, 2025 09:19 AM
கோவை:
தனித்துவமான சாதனைகள் புரிந்த, 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள், விருது பெற விண்ணப் பிக்கலாம்.
கலெக்டர் பவன் குமார் அறிக்கை:
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு, பெண்களுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் குறித்து, மக்கள் மத்தியில் ஓவியங்கள் வரைவது, கவிதைகளை உருவாக்குவது மற்றும் கட்டுரைகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறந்து விளங்கும், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள், ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், பெண் குழந்தைகள் தினமான ஜன., 24ல் மாநில அரசின் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது.
கோவையில் ஆண்கள் மட்டுமே சாதிக்கக்கூடிய பணிகளில் சாதித்து காட்டிய பெண் குழந்தைகள், பெண் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்கள், தனித்துவமான சாதனைகள் புரிந்த, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், விருது பெற வரும் 20க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை, https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

