ஒரகடத்தில் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம்; சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம்
ஒரகடத்தில் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம்; சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம்
UPDATED : நவ 02, 2024 12:00 AM
ADDED : நவ 02, 2024 05:10 PM

சென்னை:
ஒரகடம் பகுதியில் ரூ.2,858 கோடி மதிப்பில் உலகளாவிய மையம் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செயிண்ட் கோபைன் நிறுவனம், தமிழகத்தில் திருப்பெரும்புதூர், பெருந்துறை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நிறுவி, ரூ.5,000 கோடி வரையில் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், 5,000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
சென்னை ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.2,858 கோடி செலவில், 127 ஏக்கர் பரப்பளவில் தொழில் நிறுவனத்தை செயிண்ட் கோபைன் நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்திற்கு கடந்த ஆக., மாதம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார்.
இந்த நிலையில், இந்த தொழில் மையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த தொழில் மையம் அமையும் பட்சத்தில் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.