UPDATED : மே 06, 2026 02:14 PM
ADDED : மே 06, 2026 02:15 PM
தர்மபுரி:
திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும், மே, 11ம் தேதி முதல், மே, 20ம் தேதி வரை, 10 நாட்கள் பயிற்சி நடக்கிறது. இதில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை. உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து, பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளாராகவும் பணியில் சேரலாம்.
மேலும் சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த, தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளாராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவர்கள், 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டணம், 8,500 ரூபாய் செலுத்த வேண்டும்.
கூடுதல் விபரங்கள் பெற, 94437 28438 என்ற மொபைல்போன் எண்ணில் அறியலாம். இப்பயிற்சி தர்மபுரி, வாசுகவுண்டர் வீதியில், செந்தில்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகே, சாந்தி ஹார்டுவேர்ஸ் எதிரே, ஜே.ஆர்., காம்ப்ளக்ஸ், 2வது மாடி, நெ.7, இ.பி.ஆர்., எஜூகேஷன் பாயின்ட் பயிற்சி நிலையத்தில், நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
