UPDATED : செப் 18, 2026 03:50 PM
ADDED : செப் 18, 2026 03:58 PM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில் வணிகவியல் மன்ற துவக்க விழா முதல்வர் மைதிலி தலைமையில் நடந்தது.
உதவி பேராசிரியர்கள் சுதா, சக்திவேல், செல்வம் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் பசுபதி வரவேற்றார்.
விழாவில் திருப்பூர் மாவட்டம் காங்கயம், 'இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ்' கல்வி நிறுவனத்தை சேர்ந்த இணை பேராசிரியர் கவுசல்யா தேவி 'வணிகத்தில் நவீன போக்குகள்' என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்வில் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், கலந்து கொண்டனர்.
