அரசு பஸ் ஊழியர்கள் அலட்சியம்; மாணவர்கள் பஸ் ஏறுவதில் சிக்கல்
அரசு பஸ் ஊழியர்கள் அலட்சியம்; மாணவர்கள் பஸ் ஏறுவதில் சிக்கல்
UPDATED : நவ 28, 2024 12:00 AM
ADDED : நவ 28, 2024 08:18 AM
கிணத்துக்கடவு:
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே ஏலூர் பிரிவில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளது.
இங்குள்ள பஸ் ஸ்டாப்பில், காலை மற்றும் மாலை நேரத்தில் அதிகளவு மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் வந்து செல்கின்றனர். இதில், மாலை நேரத்தில் பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள், பஸ் ஸ்டாப்பில் நின்று பஸ் ஏறும் போது, மாணவர்கள் ஏறி விட்டார்களா, இல்லையா என கவனிக்காமல், அலட்சியமாக அரசு பஸ்சை இயக்குகின்றனர்.
இதனால், விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, பஸ் ஸ்டாப்பில் முறையாக பஸ்சை நிறுத்தி, பயணியர் ஏறியதை உறுதி செய்த பின், நகர்த்த வேண்டும்.
மாலை நேரத்தில், பஸ் ஸ்டாப்பில், போலீசார் அவ்வப்போது ரோந்து பணி மேற்கொண்டு, பஸ் நின்று செல்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.