பேராசிரியர் நியமனம் இல்லாததால் அரசு கல்லுாரி முதல்வர்கள் அதிருப்தி
பேராசிரியர் நியமனம் இல்லாததால் அரசு கல்லுாரி முதல்வர்கள் அதிருப்தி
UPDATED : ஏப் 18, 2025 12:00 AM
ADDED : ஏப் 18, 2025 09:17 AM
கோவை:
புதிதாக துவங்கிய பாடப்பிரிவுகளுக்கு, ஆசிரியர்கள் நியமனம் இல்லாததால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, கல்லுாரி முதல்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், 130 க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில், குறிப்பிட்ட கால இடைவெளியில், புதிய பாடப்பிரிவுகள் தேவையின் அடிப்படையில் துவக்கப்படுகின்றன.
கடந்த கல்வியாண்டில், 75க்கும் மேற்பட்ட புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் ஏராளமான புதிய பாடப்பிரிவுகள் துவங்க, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் சார்பில், கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், புதிய பாடப்பிரிவுகளில், நிபுணத்துவம் பெற்ற போதிய ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, ஏற்கனவே பிற துறையில் பணிபுரியும் ஆசிரியர்களே கூடுதலாக பாடங்களை கவனிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக, மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அரசு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.