அரசு போட்டி தேர்வுக்கு 9ல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
அரசு போட்டி தேர்வுக்கு 9ல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
UPDATED : ஆக 29, 2026 01:20 PM
ADDED : ஆக 29, 2026 01:21 PM
செங்கல்பட்டு:
'செங்கல்பட்டில், அரசு போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வரும் டிச., 9ம் தேதி தொடங்கப்படும்' என கலெக்டர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், அரசு போட்டி தே ர்வுகளுக்கு தயாராகும் தே ர்வர்ளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய அரசு போட்டித்தேர்வுக்கான, எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டது.
இத்தேர்வுக்கு 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்த தேர்வர்கள், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கு தயாராகும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த போட்டி தேர்வாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், நேரடி பயிற்சி வகுப்பு வரும் செப்., 9ம் தேதி தொடங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 044 - 2742 6020 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
