தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிரம்

5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிரம்

5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிரம்


UPDATED : நவ 16, 2026 10:38 AM

ADDED : நவ 16, 2026 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 10:38 AM ADDED : நவ 16, 2026 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம் அண்டை நாடுகளால் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில், எல்லைகளை பாதுகாக்கும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களை படைகளில் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சுயசார்பு கொள்கையின்படி நம் நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஒ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் அதிநவீன நடுத்தர மேம்பட்ட போர் விமானங்களை வடிவமைத்து வருகிறது.

இரண்டு சக்திவாய்ந்த இன்ஜின்களுடன், ஒருவர் மட்டுமே இயக்கக்கூடிய வகையில், உட்புறத்தில் 1,300 கிலோ எடையிலும், வெளிப்புறத்தில் 5,500 கிலோ எடையிலான வெடிப்பொருட்களை எடுத்து செல்லவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இது தவிர, 6,500 கிலோ எடையிலான எரிப்பொருள்களை கொண்டு செல்லக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்படுகிறது. ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை, இந்திய விமானப்படையில் 2035ம் ஆண்டுக்கு முன் இணைக்கும் நோக்கில் 125 போர் விமானங்களை தயாரிக்க, 2 லட்சம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை போர் விமானமான மேம்பட்ட நடுத்தர போர் விமானம் திட்டத்தின் முன்மாதிரிகளை உருவாக்குவதற்கான ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று தனியார் தலைமையிலான நிறுவனங்கள் தங்களது ஏலங்களைச் சமர்ப்பித்துள்ளன.

ஏலம் சமர்ப்பித்துள்ள மூன்று நிறுவனங்கள்

* டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்

* எல்&டி தலைமையிலான கூட்டமைப்பு

* பாரத் போர்ஜ் தலைமையிலான கூட்டமைப்பு

பாதுகாப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்ட ஆய்வுக் குழு இந்த ஏலங்களை மதிப்பீடு செய்யும் பணியை துவங்கி உள்ளது. குழு ஆய்வு செய்து, ராணுவ அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யும். இரண்டு நிறுவனங்களை இறுதி செய்து ஒப்பந்தத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us