அரசு மாதிரி பள்ளி கட்டடம் : எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு
அரசு மாதிரி பள்ளி கட்டடம் : எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு
UPDATED : டிச 24, 2025 07:47 AM
ADDED : டிச 24, 2025 07:48 AM
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதி செல்லங்குப்பத்தில் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதி கட்டட பணிகளை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதி, காணை ஒன்றியம், கெடார் அடுத்த செல்லங்குப்பத்தில் ஊராட்சியில் ஒரே வளாகத்தில் 50.47 கோடி ரூபாயில் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவர் விடுதி கட்டப்பட்டு இறுதி கட்ட பணியை எட்டியுள்ளது. இந்த கட்டடங்களை இம்மாத இறுதியில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாதிரி பள்ளி வளாகம் மற்றும் மாணவர் விடுதி வளாகத்தினை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் ராஜா, முருகன், திட்டக்குழு தலைவர் முருகன், ஜெயபால், ஒன்றிய துணைச் சேர்மன் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கருணாகரன், முகிலன், துணைச் செயலாளர் சிவராமன், ஊராட்சி தலைவர்கள் இந்திரா மணி, சீனுவாசன், துணைத் தலைவர் ஏஞ்லினா தாஸ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், மாவட்ட பிரதிநிதி சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

