UPDATED : டிச 27, 2024 12:00 AM
ADDED : டிச 27, 2024 12:10 PM
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில், அனைத்து அரசு அலுவலர்களுக்கான துறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலர்களுக்கான தேர்வுகள், கே.எஸ்.சி., பள்ளியில் நேற்று முதல் துவங்கியுள்ளன. காலை மற்றும் மாலை என இரு பிரிவுகளாக தேர்வுகள் நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி., பிரிவு அலுவலர்கள் வெங்கடேசன், ஜெயபாண்டியன் ஆகியோர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பதவி உயர்வு கைகூடவேண்டும் என்பதால், மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதிவருகின்றனர். நாளொன்றுக்கு, 180 முதல் 200 பேர் வரை தேர்வு எழுதுகின்றனர். வரும், 29ம் தேதி வரை நடைபெறும் தேர்வை, மாவட்டத்தில் மொத்தம் 1,706 அரசு அலுவலர்கள் எழுத உள்ளனர்.