அரசு பாலிடெக்னிக்கில் சேர்க்கை: வரும் 31ம் தேதி கடைசி நாள்
அரசு பாலிடெக்னிக்கில் சேர்க்கை: வரும் 31ம் தேதி கடைசி நாள்
UPDATED : ஆக 21, 2026 04:33 PM
ADDED : ஆக 21, 2026 04:35 PM
சங்கராபுரம்:
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வரும் 31ம் தேதி மாணவர் சேர்க்கைக்கு கடைசி நாளாகும்.
இது குறித்து கல்லுாரி அலுவலக செய்திக்குறிப்பு:
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 2026 - 27ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் www.tnpoly.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப பதிவு கட்டணம் 150 ரூபாய் ஆகும். .எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பதிவு கட்டணம் இல்லை.
கல்லுாரியில் 8 பாடப்பிரிவுகள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 3 ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கும், ஐ.டி.ஐ., மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 2 ஆண்டு நேரடி டிப்ளமோ சேர்க்கைக்கும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி இம்மாதம் 31ம் தேதி ஆகும். ஆண்டு கல்வி கட்டணம் 2,202 ரூபாய்.
மேலும் மத்திய, மாநில அரசுகளின் உதவி தொகைகள், மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய். இலவச பஸ் பயண அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கல்லுாரியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
