அரசு தொடக்கப் பள்ளிக்கு விருது கிராம மக்கள் பாராட்டு
அரசு தொடக்கப் பள்ளிக்கு விருது கிராம மக்கள் பாராட்டு
UPDATED : மார் 13, 2026 04:14 PM
ADDED : மார் 13, 2026 04:24 PM
சேத்தியாத்தோப்பு:
அரசு தொடக்கப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்ட நிலையில், கிராம மக்கள் ஆசிரியர்களை பாராட்டினர்.
புவனகிரி ஒன்றியத்தில் இந்தாண்டு வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில் கற்றல் செயல்பாட்டிற்கான சிறந்த விருது மஞ்சக்கொல்லை அரசு தொடக்கப் பள்ளி பெற்றது. கடலுாரில், கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார் பள்ளிக்கு விருது கேடயம் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மஞ்சக்கொல்லை தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராஜாராமலிங்கம் வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வியிடம் விருதை, நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்று பள்ளிக்கு விருது கிடைப்பதற்கு ஒத்துழைப்பு தந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும் மாணவர்களை வாழ்த்தினர். ஆசிரியர்கள் மாணவர்கள், கேக் வெட்டி கொண்டாடினர்.
இதில் உதவி ஆசிரியர்கள் அல்போன்சாமேரி, அறிவழகி, மற்றும் சரண்யா, சவுந்தர்யா, அமலா, வாசுகி, மாணவ ,மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
