தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தி.மு.க.,வினரின் கிடங்காக மாறிய அரசு பள்ளி வகுப்பறை

தி.மு.க.,வினரின் கிடங்காக மாறிய அரசு பள்ளி வகுப்பறை

தி.மு.க.,வினரின் கிடங்காக மாறிய அரசு பள்ளி வகுப்பறை


UPDATED : பிப் 12, 2026 09:46 PM

ADDED : பிப் 12, 2026 09:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 12, 2026 09:46 PM ADDED : பிப் 12, 2026 09:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, கல்கிணற்று வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறையில், தி.மு.க.,வினர் பரிசுப் பொருட்களை வைத்துள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக, பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட, தி.மு.க., ஏற்பாட்டில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி என்ற பெயரில், கிராமங்களில் வீடுதோறும் அண்டா, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை, தி.மு.க.,வினர் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

மண்டபம் ஒன்றியம், கல்கிணற்று வலசை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறையை இதற்கான பரிசுப்பொருட்கள் வைக்கும் கிடங்காக, தி.மு.க.,வினர் பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரவீந்திரன் கூறுகையில், “பள்ளியில் பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டது குறித்து அப்பகுதி வட்டார கல்வி அலுவலர் விசாரிக்கிறார். தலைமையாசிரியரிடம் விளக்கக் கடிதம் கேட்டுள்ளோம். தற்சமயம் அப்பள்ளியில் பரிசுப்பொருட்கள் எதுவும் இல்லை,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us