UPDATED : மே 16, 2024 12:00 AM
ADDED : மே 16, 2024 10:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் :
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசுப்பள்ளியில், பிளஸ் 1ல், இணைய மாணவியர் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த, 10ம் தேதி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானது. அதிகளவிலான மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் இணைய ஆர்வம் காட்டினர். பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்றும் மாணவியர் கூட்டம் அலைமோதியது.
பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்புகள் சிறப்பாக இருப்பது, கல்வி போதிப்பு முறை, நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வழங்குவது என, பெற்றோர் திருப்திபடும் அளவுக்கு கல்வி போதிப்பு இருப்பதால், பெற்றோர் பலரும், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கின்றனர் என்றனர்.