UPDATED : ஜூலை 17, 2026 08:56 PM
ADDED : ஜூலை 17, 2026 08:58 PM
திருமங்கலம்:
சர்வதேச மிஷன் சக்தி சேட்டிலைட் தயாரிப்பு திட்டத்திற்கு திருமங்கலம் அரசு பெண்கள் மாணவிகள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2022-23ம் ஆண்டு ஆசாதி சாட் செயற்கைக்கோள் தயாரிப்பு திட்டத்தில் திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து ஆசாதி சாட் - 2 செயற்கைக்கோள் திட்டத்திலும் 10 மாணவியர் பங்கேற்று இஸ்ரோ வரை சென்று வந்தனர்.
பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் புதிய மிஷன் சக்தி சேட்டிலைட் தயாரிப்பு திட்டத்திற்கும் 10 மாணவிகள் பயிற்சி பெற்றனர். அதில் 2 மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு பெற்ற பிளஸ்1 மாணவிகள் ஜமீலா, மோனிகா ஆகியோர் டில்லி நொய்டாவில் உள்ள கவுதம புத்தா பல்கலையில் ஆக. 22 முதல் 10 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இம்மாணவியரை தலைமை ஆசிரியர் அருள்ஜோதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் த லைவர் ஜெயராமன், அறிவியல் ஆசிரியை சிந்தியா பாராட்டினர்.
ஜெயராமன் கூறுகையில், “மாணவிகள் டில்லி சென்று வரும் செலவை காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் ஏற்றுள்ளார். மேலும் டில்லியில் மாணவியருக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்” என்றார்.
