UPDATED : மார் 20, 2026 05:31 PM
ADDED : மார் 20, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
கருமத்தம்பட்டி:
தேசிய திறனாய்வு தேர்வு, டிரஸ்ட் தேர்வில் வாகராயம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் இருவர் வெற்றி பெற்றனர்.
தேசிய திறனாய்வு தேர்வு எழுதிய வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சனோஜா தேர்ச்சி பெற்றார்.
மேலும், பள்ளி கல்வித்துறை சார்பில் நடக்கும் டிரஸ்ட் தேர்வில் ஒன்பதாம் வகுப்பு மாணவி முனீஸ்வரி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
