தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை; மாலை அணிவித்து வரவேற்பு

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை; மாலை அணிவித்து வரவேற்பு

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை; மாலை அணிவித்து வரவேற்பு


UPDATED : மார் 17, 2026 03:11 PM

ADDED : மார் 17, 2026 03:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2026 03:11 PM ADDED : மார் 17, 2026 03:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அஞ்செட்டி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், மாவினட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வரும் கல்வியாண்டிற்கான தீவிர மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

மாணவ, மாணவியருக்கு அரசு வழங்கும் திட்டங்கள், இலவச கல்வி உபகரணங்கள் குறித்து எடுத்துரைத்து, மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் பொருட்டு, ஓசூர் வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து நேற்று முன்தினம் காலை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் தலைமை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மாலை அணிவித்து, இலவசமாக எழுது பொருட்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன.

அதே போல், அஞ்செட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. தேவகவுண்டன் தொட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில், வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், 25க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us