UPDATED : மே 15, 2025 12:00 AM
ADDED : மே 15, 2025 12:26 PM
சென்னை:
பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழுவில், கவர்னர் - வேந்தர் என்ற சொல் நீக்கப்பட்ட சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்ணா பல்கலை துணை வேந்தரை பரிந்துரைப்பதற்கான மூவர் அடங்கிய தேடுதல் குழுவில், அரசின் பிரதிநிதிகள் பங்கேற்பர். ஏற்கனவே பல்கலை சட்டத்தின்படி இடம்பெற்ற, வேந்தரான கவர்னர் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், வேந்தரின் பிரதிநிதி அல்லது ஒருங்கிணைப்பாளர் என்ற சொல்லுக்கு பதிலாக, வேந்தரின் பிரதிநிதி அல்லது உறுப்பினர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், கவர்னர் - வேந்தர் என்ற சொல் நீக்கப்பட்டு, அரசு என, மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், மதுரை காமராஜ் பல்கலை, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகளின் துணை வேந்தர் தேடுதல் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.