அரசு கல்லுாரி விரிவுரையாளர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் இல்லை
அரசு கல்லுாரி விரிவுரையாளர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் இல்லை
UPDATED : ஜூலை 22, 2024 12:00 AM
ADDED : ஜூலை 22, 2024 08:50 AM
தாடிக்கொம்பு:
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளமும் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை.
மே மாதம் விடுமுறை என்பதால் ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவும் முறையாக வழங்கப்படாததால் குழந்தைகளை பள்ளி, கல்லுாரிகளில் சேர்ப்பது, மருத்துவச் செலவு, வீடு வாடகை, குடும்ப செலவு, அன்றாட செலவு என வாழ்வாதாரப் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மாணவர் சேர்க்கை, விடைத்தாள் திருத்தும் பணி, அக மதிப்பீட்டு படி என தொடர் பணிகளில் ஈடுபடும் இவர்களுக்கு முறையாக சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

