தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரி ஆசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 26, 2024 12:00 AM

ADDED : அக் 26, 2024 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2024 12:00 AM ADDED : அக் 26, 2024 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்:
ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார்கேடில், திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது.
இங்கு, 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கல்லுாரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர், நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில், கல்லுாரியில் மாற்றுப்பணியில் பணிபுரியும் அண்ணாமலை பல்கலை மிகை பேராசிரியர்கள் அரசு கல்லுாரியிலேயே நிரந்தரமாக பணியாற்றுவதை கண்டிக்கிறோம். அரசு கல்லுாரிகளில் மிகை பேராசிரியர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டால், அது சமூக நீதிக்கொள்கைக்கு எதிராக அமைந்துவிடும். அண்ணாமலை பல்கலை மிகை

பேராசிரியர்களை அரசு கல்லுாரியில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முற்-றிலும் நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 50க்கும் மேற்-பட்ட பேராசிரியர்கள் அரசு கல்லுாரி நுழைவாயில் முன் வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொறுப்-பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார்.

அண்ணாமலை பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைதலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். செயலாளர் சர்மிளாபானு, பொருளாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், அண்ணாமலை பல்கலை உபரி ஆசிரியர்களை அரசு கல்லுாரிகளில் பணி நிரந்தரம் செய்யக்கூடாது. அவர்களது மாற்றுப்பணியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், 25 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us