தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முடிவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முடிவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முடிவு


UPDATED : ஏப் 29, 2026 05:50 PM

ADDED : ஏப் 29, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2026 05:50 PM ADDED : ஏப் 29, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்:
அரசு பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜ் விருது வழங்க ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி., மக்கள் நலமன்றம் முடிவு செய்துள்ளது.

ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நடந்தது. பொருளாளர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர்கள் வேட்டையார், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பாஸ்கர்பாண்டி வரவேற்றார்.

மன்றத்தின் 20வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தாண்டு 2 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வுகளில் ஒவ்வொரு பள்ளியிலும் அதிக மதிப்பெண் பெறும் முதல் இரண்டு மாணவர்களுக்கு காமராஜர் விருதும், கல்வி வளர்ச்சி நிதியும், சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் வழங்க வேண்டும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 85 சதவீதம் வாக்களித்த வாக்காளர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், வரும் தேர்தல்களில் 100 சதவிகிதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற கேட்டுக் கொள்வது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞரணி நிர்வாகி அரவிந்தன் நன்றி கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us