தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.கே.வி., பள்ளியில் பட்டமளிப்பு விழா

ஏ.கே.வி., பள்ளியில் பட்டமளிப்பு விழா

ஏ.கே.வி., பள்ளியில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஏப் 01, 2026 03:52 PM

ADDED : ஏப் 01, 2026 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 01, 2026 03:52 PM ADDED : ஏப் 01, 2026 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரத்தில் உள்ள ஏ.கே.வி., பப்ளிக், சீனியர் செகண்டரி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. தலைவர் ஆறுமுகம், தாளாளர் முத்துசாமி, கல்வி இயக்குனர்கள் ஆர்.பழனிவேல், சீனிவாசன், பள்ளி முதல்வர் பி.பழனிவேல், கல்வி ஆலோசகர் ஐயப்பராஜ், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், பள்ளி தலைவர் ஆறுமுகம், குழந்தைகளின் திறனை வளர்ப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கிராமப்புற சூழலில் உலகத்தரம் வாய்ந்த கல்வியை, ஏ.கே.வி., பள்ளி வழங்குகிறது என்றார்.

தாளாளர் முத்துசாமி, குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு குறித்து விவரித்தார். பள்ளி முதல்வர் பழனிவேல், குழந்தைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

கல்வி ஆலோசகர் ஐயப்பராஜ், குழந்தைகளின் கல்வி திறனை வளர்ப்பதில், பெற்றோர்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார். பின், கல்வி நிர்வாகத்தினர், மழலையர்களுக்கு பட்டமளித்து, வாழ்த்து தெரிவித்தனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us