தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சங்கரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சங்கரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சங்கரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


UPDATED : பிப் 01, 2026 09:13 PM

ADDED : பிப் 01, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2026 09:13 PM ADDED : பிப் 01, 2026 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக கோவை ஜி.கே.எம்., குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆடிட்டர் கார்த்திகேயன் பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசுகையில், “ஒரு பட்டம் என்பது ஒரு தொடக்கப் புள்ளி மட்டுமே; இறுதி இலக்கு அல்ல. பட்டம் பெற்ற பின்பும் மாணவர்கள் தொடர்ந்து கற்றலில் ஈடுபட வேண்டும். தனித்துவத்தை வளர்த்துக்கொண்டு, சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்,” என்றார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 360க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ராமச்சந்திரன், இணைச் செயலர் சந்தியா, துணை இணைச்செயலர் நித்யா, அறங்காவலர்கள் கல்யாணராமன் மற்றும் பட்டாபிராமன், முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us