UPDATED : ஆக 25, 2025 12:00 AM
ADDED : ஆக 25, 2025 04:32 PM

சென்னை:
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் மற்றும் இன்டலெக்ட் இணைந்து நடத்தும் 'டிசைன் திங்கிங்' பயிற்சி திட்டத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
மூன்று நாள் விரிவான ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 110 ஆசிரியர்கள் இவ்விழாவில் சான்றிதழ்களை பெற்றனர்.
2019ம் ஆண்டு முதல் தொடங்கிய இத்திட்டம் மூலம் இதுவரை 275 ஆசிரியர்கள் டிசைன் திங்கிங் பயிற்சியில் தேர்ச்சி பெற்று, 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் புதுமையான கற்றல் மற்றும் சிந்தனை கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். விழாவில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்தமிழ்ச்செல்வன், “சமூகப் பிரச்சினைகளுக்கு மனிதனை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்குவதில் டிசைன் திங்கிங் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.
இந்த நிகழ்வில் இன்டலெக்ட் டிசைன் அரீனா நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு இடையிலான ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டது. தலைமை விருந்தினராக பங்கேற்ற ரமணன் (சிஇஓ, இன்டலெக்ட் டிசைன் அரீனா) மற்றும் டிசைன் திங்கிங் பள்ளி இணை நிறுவனர் மஞ்சு ஜெயின் ஆகியோர் உரையாற்றினர்.
இந்த பயிற்சி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வி மற்றும் புதுமை சிந்தனைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விழாவில் வலியுறுத்தப்பட்டது.