தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளியில் பட்டமளிப்பு விழா

எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளியில் பட்டமளிப்பு விழா

எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளியில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஏப் 15, 2026 10:48 AM

ADDED : ஏப் 15, 2026 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 15, 2026 10:48 AM ADDED : ஏப் 15, 2026 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்:
காரமடை அருகே உள்ள எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மழலையர் பள்ளி சிறுவர், சிறுமியருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவுக்கு பள்ளியின் செயலாளர் ஜெயக்கண்ணன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஹம்சப்ரியா வரவேற்றார்.

டாக்டர் லேகா, 40 சிறுவர், சிறுமிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், “குழந்தைகளின் ஆர்வத்திற்கு ஏற்ப வளர்க்க வேண்டும். அவர்கள் எந்த துறையை தேர்வு செய்கிறார்களோ, அதில் அவர்களை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊக்கப்படுத்த வேண்டும்,” என்றார்.

விழாவில் பெற்றோர் பங்கேற்றனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை பிரவீணா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us