தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஆக 10, 2026 03:39 PM

ADDED : ஆக 10, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 03:39 PM ADDED : ஆக 10, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில், 2025 - 26ம் கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் வரவேற்று, ஆண்டறிக்கை படித்தார். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் இணை செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்து பேசினார்.

அசோக் லேலண்ட் நிறுவன (சென்னை தொழில்நுட்ப மையம்) ஒழுங்குமுறை மற்றும் ஹாேமோலோகேஷன் பிரிவு தலைவர் முத்துக்குமார் பேசுகையில், “அனைத்து பொறியியல் துறைகளுக்கும், 'டிப்ளமோ' கல்வியே அடிப்படையாகும். தொழில் துறையில் வெற்றிகரமான பணி வாய்ப்புகளை பெற ஒழுக்கம் மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவை அவசியமாகும்,” என்றார்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்ப்டடன. மொத்தம், 15 தங்க பதக்கங்கள், 15 வெள்ளி, 15 வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டன. மொத்தம், 391 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தேர்வு கட்டுப்பாட்டாளர் மைக்கேல் ஞானராஜ் ஒருங்கிணைத்தார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us