UPDATED : அக் 27, 2024 12:00 AM
ADDED : அக் 27, 2024 10:34 AM

காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் அக்.28ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொள்கிறார்.
காரைக்குடி அழகப்பா பல்கலை.,யின் 35வது பட்டமளிப்பு விழா அக்.28ம் தேதி பல்கலை., பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெறுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவிற்கு தலைமையேற்று பட்டங்களை வழங்குகிறார்.
திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன இயக்குனர் பவன் குமார் சிங், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொள்கின்றனர். அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி வரவேற்று பல்கலை., சாதனைகள் குறித்து பேசுகிறார்.
விழாவில் 3 பேருக்கு அறிவியல் அறிஞர் பட்டமும், 93 பேருக்கு முனைவர் பட்டமும், பல்வேறு துறைகளில் பயின்ற 42 ஆயிரத்து 433 மாணவ மாணவியர் பட்டங்கள் பெறுகின்றனர். இதில், 277 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.