UPDATED : ஜூலை 04, 2025 12:00 AM
ADDED : ஜூலை 04, 2025 04:36 PM

சென்னை:
விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை விமான நிலையத்தில் இரண்டாவது அடிப்படை போர் பயிற்சி பாடத்திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் லெப்டினன்ட் அதுல் குமார் துல் மற்றும் துணை லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா ஆகியோருக்கு விமானப்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் ஜனக் பெவ்லி தங்க விங்ஸ் விருதை வழங்கினார்.
படையினரின் வரலாற்றில் முக்கிய கட்டமாக, துணை லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா இந்திய கடற்படை போர் விமானப் பிரிவில் சேர்ந்த முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஏற்கனவே கடல்சார் ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பெண் அதிகாரிகளை பணியில் சேர்த்துள்ள இந்திய கடற்படை, தற்போது போர் விமானப் பிரிவிலும் அவர்களை இணைத்து, மகளிர் சக்திக்கும் பாலின சமத்துவத்திற்கும் வலுவான ஆதரவாக நிற்கின்றது.