தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராமகிருஷ்ண கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ராமகிருஷ்ண கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ராமகிருஷ்ண கல்லூரியில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஆக 03, 2026 02:47 PM

ADDED : ஆக 03, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2026 02:47 PM ADDED : ஆக 03, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சியில், வித்யாலய உதவி செயலாளர் சுவாமி தத்பாசானந்தர், வித்யாலய மாணவர்கள் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல் பேசுகையில், மாணவர்கள் வாய்ப்பைத் தேடி பயணிக்க வேண்டும். திறன் உடைய செயல் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். செயல் மட்டுமே உங்களை வெற்றியாளராக மாற்றும். கல்வி வாழ்வை உயர்த்தும் என்றார்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஜெயபிரகாஷ், செயலாளர் கந்தப்பன், ஆங்கில இலக்கியத்துறை உதவி பேராசிரியர் மகாலிங்கம், தமிழ் துறை உதவி பேராசிரியர் அபிமன்யு உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

விழாவில், இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கனகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us