டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு 14,199 தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு 14,199 தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்
UPDATED : அக் 29, 2026 01:20 PM
ADDED : அக் 29, 2026 01:21 PM
நாமக்கல் கலெக்டர் மதுபாலன் வெளியிட்ட அறிக்கை:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ பதவிகளுக்கான, முதல்நிலை தேர்வு, வரும் நவ., 1ல், காலை, 9:30 முதல், மதியம், 12:30 மணி வரை நடக்கிறது. இத்தேர்வு, நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு ஆகிய தாலுகாவில், 50 தேர்வு மையங்களில், மொத்தம், 14,199 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வு சிறப்பாக நடத்த, துணை கலெக்டர் நிலையில், நான்கு பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வர்கள், தேர்வு கூடங்களுக்கு எளிதாக சென்றுவர சிறப்பு பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், மின் வசதி, மருத்துவ வசதிகளை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
தேர்வர்கள், காலை, 8:00 மணிக்கு முன், தேர்வு மையங்களுக்கு சென்றுவிட வேண்டும். காலை, 9:00 மணிக்கு பின் யாரும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கபட மாட்டார்கள். தேர்வர்கள், தற்போதைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை எடுத்து வர வேண்டும்.
அதே போல், தங்களுக்குரிய தேர்வு மையங்களுக்கு சென்றடைய, தேர்வுக்கு முந்தைய நாளே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மைய அமைவிடங்களை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தேர்வர்கள், 'அனலாக் வாட்ச்' மட்டுமே அணிந்துவர வேண்டும். ஸ்மார்ட் வாட்ச், 'ஏ.ஐ.,' தொழில் நுட்பத்துடன் கூடிய கண் கண்ணாடி மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட தேர்வாணையத்தால் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
