UPDATED : டிச 13, 2024 12:00 AM
ADDED : டிச 13, 2024 06:37 PM

சென்னை:
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான, குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான, குரூப் 2, 2ஏ பணிகளுக்கான தேர்வுகள், கடந்த செப்., 14ம் தேதி நடந்தன. ஐந்து லட்சத்து, 83,467 பேர் எழுதினர். இவர்களில், முதன்மை எழுத்து தேர்வுக்கு தேர்வானோரின் பட்டியலை, நேற்று டி.என்.பி.எஸ்.சி., தன் இணையதளமான, www.tnpscresults.tn.gov.inல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, குரூப் 2ல், 534 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், முதன்மை தேர்வுக்கு, 7,987 பேரும், குரூப் 2ஏல், 2,006 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், 21,822 பேரும் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான முதல் தாள் தேர்வு, வரும் பிப்., 2ம் தேதியும், இரண்டாம் தாள் பிப்., 8 மற்றும் 23ம் தேதிகளிலும் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.