UPDATED : ஆக 13, 2026 06:22 PM
ADDED : ஆக 13, 2026 06:24 PM

சென்னை:
தமிழக அரசின் குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1, குரூப் - 2 மற்றும் 2ஏ, குரூப் - 4 ஆகிய பதவிகளுக்கான அலுவலர்களை போட்டி தேர்வுகள் வாயிலாக, தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 மற்றும் 2ஏ போட்டி தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் - பதிவாளர் நிலை 2, ஆண் சிறை அலுவலர், சிறப்பு உதவியாளர் உட்பட, 14 வகையான குரூப் - 2 பணியிடங்களில், மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் உள்ளன.
முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர், இளநிலை கணக்கர் உட்பட 44 வகையான 'குரூப் - 2ஏ' பணியிடங்களில், 780 காலிப்பணியிடங்கள் உள்ளன.
குரூப் - 2, 2 ஏ பதவிகளில், மொத்தம் 821 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான, முதல் நிலை போட்டித் தேர்வு, வரும், நவ., 1ம் தேதி, காலை 09:30 மணி முதல், 12:30 மணி வரை நடக்கிறது. இதற்கு, செப்., 9ம் தேதி, வரை https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
