தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரலாற்றை சிதைக்கும் கருத்துகள்: புத்தக ஊழலுக்கு வலுக்கும் கண்டனம்

வரலாற்றை சிதைக்கும் கருத்துகள்: புத்தக ஊழலுக்கு வலுக்கும் கண்டனம்

வரலாற்றை சிதைக்கும் கருத்துகள்: புத்தக ஊழலுக்கு வலுக்கும் கண்டனம்


UPDATED : நவ 11, 2026 01:35 PM

ADDED : நவ 11, 2026 01:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 01:35 PM ADDED : நவ 11, 2026 01:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:
கோவையில் நடந்த நுாலக ஊழலுக்கு எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், பல்லடத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:

கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நுாலத்தில் செயற்கை நுண்ணறிவு வாயிலாக உருவாக்கப்பட்ட போலி நூல்கள் இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ் மொழி இயல்பான நடையில் இல்லை.

நுாலாசிரியர்களின் பெயர்கள்கூட செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளன. வரலாற்று நுால்களில் இடம்பெற்றுள்ள கருத்துகள் திரிக்கப்பட்டுள்ளதுடன், நுால்களின் உள்ளடக்கமும் தன்மையும் மாற்றப்பட்டுள்ளன.

இத்தகைய நுால்களைப் படிப்பவர்களின் சிந்தனையில் தவறான புரிதல்களும் குழப்பங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, வரலாற்றுத் தகவல்கள் திரிக்கப்பட்ட நிலையில் வாசகர்களைச் சென்றடைந்தால், அதன் தாக்கம் நீண்டகாலம் நீடிக்கக்கூடும்.

எனவே, வாசகர்கள் குழப்பத்துக்கு ஆளாகும் முன்பே நுாலகத்தில் உள்ள நுால்களை முழுமையாக ஆய்வு செய்து, போலியான நுால்களைக் கண்டறிந்து உடனடியாக நீக்க வேண்டும்.

புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு மற்றும் ஊழலில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் ஏற்பட்ட இழப்புத் தொகையையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us