தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரி பல்கலையில் ஜி.எஸ்.டி., கருத்தரங்கம்

புதுச்சேரி பல்கலையில் ஜி.எஸ்.டி., கருத்தரங்கம்

புதுச்சேரி பல்கலையில் ஜி.எஸ்.டி., கருத்தரங்கம்


UPDATED : செப் 10, 2026 05:34 PM

ADDED : செப் 10, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2026 05:34 PM ADDED : செப் 10, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் நடந்தது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம் சார்பில், ஜி.எஸ்.டி., - 2.0; இந்தியாவில் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

பொருளாதாரத் துறைத் தலைவர் சங்கரன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் நோக்கவுரையாற்றினார். பேராசிரியர் நடராஜன், இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் ஜி.எஸ்.டி, ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் விளக்கினார்.

14வது நிதிக் குழுவின் தலைவர் கோவிந்த ராவ் பேசுகையில், 'இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஜி.எஸ்.டி., வரியில் மேலும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அவசியம் என, குறிப்பிட்டார். பிரேம்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us